×

சமூக வலைத்தளங்களில் தொடர் அவதூறு கருத்து!: யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தபோது இனி அவதூறு கருத்து பதிவிட மாட்டேன் என சாட்டை துரைமுருகன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்ற 2வது நாளே மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிகளை மீறினால் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கவும், தேவைப்பட்டால் சேனலை முடக்கவும் செய்யலாம் என்றும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவதூறு கருத்து பதிவிட்டால் அதனை சமூக வலைத்தளங்களே நீக்க வேண்டும் அல்லது அதனை நீக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், அவதூறு வீடியோ குறித்து புகார் அளித்த பின்னரும், அதனை நீக்காவிட்டால் யூடியூப் நிறுவனமும் குற்றவாளிதான் என குறிப்பிட்டார். …

The post சமூக வலைத்தளங்களில் தொடர் அவதூறு கருத்து!: யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,YouTuber ,Chattay Duraimurugan ,Madurai ,Madras High Court ,Chattay Durai Murugan ,Chief Minister ,Chatti Duraimurugan ,Dinakaran ,
× RELATED மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்...